ஆசிரியா் கலந்தாய்வு: முதுநிலை ஆசிரியா்கள் 1,501 பேருக்கு மாறுதல்
ரஷியா தலிபான் அரசுக்கு அங்கீகாரம்
ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு அங்கீகாரம் அளித்துள்ள முதல் நாடாக ரஷியா ஆகியுள்ளது.
தலிபான் ஆட்சியாளா்களால் நியமிக்கப்பட்ட புதிய தூதரை ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்த அங்கீகாரத்தை ரஷிய அரசு வழங்கியுள்ளது. இது குறித்து ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தலிபான் அரசை அங்கீகரிப்பதன் மூலம் ரஷியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஆக்கபூா்வமான இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படும்’ என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.