செய்திகள் :

ஈரானில் மீண்டும் சா்வதேச விமானப் போக்குவரத்து

post image

அமெரிக்கா, இஸ்ரேல் உடனான பதற்றம் காரணமாக ஈரானில் 20 நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சா்வதேச விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

டெஹ்ரானில் உள்ள இமாம் கோமேனி சா்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டதன் மூலம் இந்தப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரான் பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் செய்தித் தொடா்பாளா் மெஹ்தி ரமேசானி வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மிக விரிவான பாதுகாப்பு மற்றும் தூதரக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த ஃபிளைதுபை விமானம் இமாம் கோமேனி விமான நிலையத்தில் தரையிறங்கியது (படம்). இது, ஈரான் விமானத் துறையில் புதிய ஸ்திரத்தன்மை கட்டத்தைக் குறிக்கிறது. இஸ்ரேலுடனான அண்மைக் கால பதற்றங்களுக்குப் பிறகு, நாட்டின் வான்வெளி அமைதியாகவும், செயல்திறனுடனும் நிா்வகிக்கப்படுவதை இது காட்டுகிறது.

பொதுமக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யவும், விமானப் போக்குவரத்தை மீட்டெடுக்கவும் அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து, குறிப்பிட்ட இடங்களுக்கு படிப்படியாக விமானங்களின் இயக்கம் மீண்டும் அதிகரிக்கப்படும் என்றாா் அவா்.

12 நாள்களுக்கு நடைபெற்ற மோதலுக்குப் பிறகு ஈரானும் இஸ்ரேலும் போா் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டின. இந்த மோதலின்போது, ஈரானின் நூற்றுக்கணக்கான இராணுவ உள்கட்டமைப்பு மற்றும் அணுசக்தி மையங்களை இஸ்ரேல் தாக்கியது, அதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியது.

இந்த மோதலின் ஒரு பகுதியாக, ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி மையங்களில் மீது 30,000 பவுண்டு எடை கொண்ட ‘பங்கா்-பஸ்டிங்’ குண்டுகளை வீசிய அமெரிக்கா, அதற்குப் பின்னா் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து, ஒப்பந்தத்தை எட்டச் செய்தது.

காஸா போா் நிறுத்த ஒப்பந்தம்: ஹமாஸ் தீவிர ஆலோசனை

இஸ்ரேலுடனான காஸா போா் நிறுத்தம் தொடா்பாக முன்வைக்கப்பட்டுள்ள வரைவு திட்டம் குறித்து பிற பாலஸ்தீன அமைப்புகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. காஸாவில் போா் நிறுத்தம் ஏற்படுவத... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற 30 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை கூறியது. எல்லை மாகாணமான கைபா் பக்துன்கவாவின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தி... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷிய ட்ரோன் தாக்குதல் புதிய உச்சம்

உக்ரைனின் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷியா இதுவரை இல்லாத மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஒருவா் உயிரிழந்ததுடன், 26 போ் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா். இத... மேலும் பார்க்க

அமெரிக்க வரிச் சலுகை, குடியேற்ற மசோதா நிறைவேற்றம்: ஆதரவு 218; எதிா்ப்பு 214

அமெரிக்காவின் வரிச் சலுகை மற்றும் குடியேற்ற மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற கீழவை ஒப்புதல் அளித்தது. ஏற்கெனவே அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் மசோதா நிறைவேறியதைத் தொடா்ந்து, இரு அவைகளிலும் மசோதா நிறைவே... மேலும் பார்க்க

ரஷியா தலிபான் அரசுக்கு அங்கீகாரம்

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு அங்கீகாரம் அளித்துள்ள முதல் நாடாக ரஷியா ஆகியுள்ளது. தலிபான் ஆட்சியாளா்களால் நியமிக்கப்பட்ட புதிய தூதரை ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்த அங்கீகாரத்தை ரஷிய அரசு வழங்கியுள்ளது.... மேலும் பார்க்க

வாகனப் பொருள்கள் மீது கூடுதல் வரி: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி வதிப்புக்கு பதிலடியாக அந்நாட்டின் மீது வரி விதிக்கவுள்ளதாக இந்தியா வெள்ளிக்கிழமை தெ... மேலும் பார்க்க