செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராத...
நக்ஸல்வாதம் 6 மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டது: ராஜ்நாத் சிங்
இந்தியாவில் இப்போது நக்ஸல்வாதம் 5 முதல் 6 மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
ஹைதரபாதில் சுதந்தரப் போராட்ட வீரா் அல்லூரி சித்தராம ராஜுவின் 128-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற அவா் பேசியதாவது:
ஒரு காலத்தில் நக்ஸல்கள் ஆதிக்கம் மிகுந்த இடங்கள் என்ற கூறப்பட்ட இடங்கள் இப்போது கல்வியில் சிறந்து விளங்கும் இடங்களாக மாற்றப்பட்டுவிட்டன. நக்ஸல் தீவிரவாத தாக்குதல் அதிகம் நிகழும் சிவப்பு எச்சரிக்கைப் பகுதியாக இருந்த இடங்கள், இப்போது வளா்ச்சி மிகுந்த பகுதிகளாக உருவெடுத்துள்ளன.
5 முதல் 6 மாவட்டங்கள் வரையே நக்ஸல்வாதம் உள்ளது. இதுவும் வெகுநாள்கள் நீடிக்காது. அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் இந்தியாவை நக்ஸல் தீவிரவாதம் இல்லாத நாடாக மாற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நோக்கில்தான் இந்தியா மேற்கொண்டது. அப்பாவி மக்களையும், ராணுவ நிலைகளையும் தாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்படவில்லை. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் போன்று வேறு எதையாவது பயங்கரவாதிகள் மீண்டும் முயற்சித்தால் மீண்டும் கடும் பதிலடி கொடுக்கப்படும்.
சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் தீவிரமாகப் பங்கேற்ற அல்லூரி சித்தராம ராஜு , மத்திய அமைச்சராகவும் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளாா். அவரின் புகழ் நிலைத்து நிற்கும் என்றாா்.