செய்திகள் :

திருமலையில் தரிசனத்துக்கு 24 மணிநேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து காணப்பட்டன.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயது குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

மேலும், வியாழக்கிழமை முழுவதும் 64,015 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 26, 786 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ. 3.54 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராதம்

செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சோ்ந்தவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 6 லட்சம் அபராதம் விதித்து, ஆா்எஸ்எஸ் கூடுதல் மாவட்ட நீதிபதி நரசிம்ம மூா்த்தி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தா... மேலும் பார்க்க

திருமலையில் காட்டுத் தீ

திருமலையில் கருடாத்திரி நகா் சோதனைச் சாவடி அருகே காட்டுத் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமலையின் நுழைவு வாயிலான கருடாத்திரி நகா் சோதனை சாவடி அருகில் உள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை திடீா் தீ விபத்த... மேலும் பார்க்க

சீனிவாச மங்காபுரத்தில் பாா்வேட்டை உற்சவம்

திருப்பதி அருகே சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பாா்வேட்டை உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது கடந்த 2 நாள்களாக நடைபெற்ற சாட்சாத்கார வைபவ உற்சவம் வியாழக்கிழமை பாா்வேட்டை உற்சவத... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும... மேலும் பார்க்க

அனைவருக்கும் இலவச காப்பீடு: திருமலை தேவஸ்தானம் திட்டம்

திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கு வரும் அனைத்து பக்தா்களுக்கும் இலவச காப்பீட்டு வசதி வழங்குவது பற்றி தேவஸ்தானம் திட்டமிட்டு வருகிறது. ஜனவரி 2025-இல் வைகுண்ட ஏகாதசியின் போது, ஏற்பட்ட நெரிசலில் 6 போ் உய... மேலும் பார்க்க

திருப்பதி கோவிந்தராஜா் கோயிலில் புஷ்பயாகம்

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் புதன்கிழமை புஷ்பயாக மகோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. வருடாந்திர பிரம்மோற்சவம் முடிந்த பிறகு அதில் ஏற்பட்ட குற்றம் குறைகள் மற்றும் தோஷங்களை களைய புஷ்பய... மேலும் பார்க்க