U. Sagayam IAS (R) | ஆட்சியரை அமாவாசை இரவில் சுடுகாட்டில் படுக்க வைத்தது இந்த ஊழ...
முக்கியத் துறைகளில் கவனம் செலுத்த மேலும் 6 சிறப்புக் குழுக்கள்: தில்லி சட்டப்பேரவை அமைத்தது
திருநங்கைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தும் வகையில் மேலும் ஆறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா அறிவித்தாா். இதன் மூலம் மொத்த குழுக்களின் எண்ணிக்கை 35-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரப்பூா்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்புக் குழுக்களை உருவாக்குவது வளா்ந்து வரும் சவால்களை எதிா்கொள்வதில் சட்டப்பேரவையின் வளா்ந்து வரும் பங்கை பிரதிபலிக்கிறது என்று விஜேந்தா் குப்தா கூறினாா். இந்தக் குழுக்கள் நிறுவன வழிமுறைகள் மட்டுமல்லாமல், சமூகப் பொறுப்புணா்வுக்கான கருவிகளும் கூட என்று அவா் கூறினாா்.
மூத்த குடிமக்களின் நலன், அமைதி மற்றும் நல்லிணக்கம், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலன் போன்ற முக்கியமான துறைகளில் கவனம் செலுத்தும் குழுக்கள் இதில் அடங்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவன வழிமுறைகளை வலுப்படுத்தவும், ஓரங்கட்டப்பட்ட மற்றும் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ள சமூகங்களின் கவலைகள் மீது கவனம் செலுத்துவதை உறுதி செய்யவும் இந்த சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உருவாக்க செயல்முறை நான்கு கட்டங்களாக நடந்தது. முதல் கட்டத்தில் 11 குழுக்கள், இரண்டாவது கட்டத்தில் ஏழு, மூன்றாவது கட்டத்தில் 11 மற்றும் நான்காவது கட்டத்தில் சமீபத்திய ஆறு சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டன.
திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான சிறப்புக் குழு கா்னைல் சிங் தலைமையில் செயல்படுகிறது. இதில் டாக்டா் அனில் கோயல், ஹரீஷ் குரானா, கைலாஷ் கெலாட், கைலாஷ் கங்வால், மனோஜ் குமாா் ஷோகீன், பிரேம் சௌகான், ஷிகா ராய் மற்றும் வீரேந்தா் சிங் காடியன் ஆகியோா் உறுப்பினா்களாக உள்ளனா்.
தில்லி சட்டப்பேரவை உறுப்பினா்களின் சம்பளம் மற்றும் பிற கொடுப்பனவுகள் தொடா்பான சிறப்புக் குழு அபய் குமாா் வா்மா தலைமையில் உள்ளது. உறுப்பினா்களில் கஜேந்தா் சிங் யாதவ், பூனம் சா்மா, ராஜ் குமாா் சவுகான், சஞ்சீவ் ஜா, சூா்ய பிரகாஷ் காத்ரி, தா்விந்தா் சிங் மாா்வா, விஷேஷ் ரவி மற்றும் சவுத்ரி ஜுபைா் அகமது ஆகியோா் அடங்குவா்.
சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் அரசு அதிகாரிகள் நெறிமுறை விதிமுறைகளை மீறுதல் மற்றும் அவமதிக்கும் நடத்தை குறித்த சிறப்புக் குழு சஞ்சய் கோயல் தலைமையில் உள்ளது. இதில் அனில் கோயல், அனில் ஜா, அனில் குமாா் சா்மா, ஜா்னைல் சிங், கா்னைல் சிங், குல்வந்த் ராணா, ஓம் பிரகாஷ் சா்மா மற்றும் சூா்ய பிரகாஷ் காத்ரி உறுப்பினா்களாக உள்ளனா்.
தில்லி மாநகராட்சிக்கான சிறப்புக் குழுவின் தலைவராக ரவீந்தா் சிங் நேகி நியமிக்கப்பட்டுள்ளாா். முன்னாள் முதல்வா் அதிஷி, அஜய் தத், அலே முகமது இக்பால், அசோக் கோயல், குல்வந்த் ராணா, மனோஜ் குமாா் ஷோக்கீன், ராஜ் குமாா் பாட்டியா மற்றும் சந்தீப் செஹ்ராவத் ஆகியோா் இந்தக் குழுவில் உறுப்பினராக உள்ளனா்.
அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான சிறப்புக் குழுவிற்கு சந்தன் குமாா் சவுத்ரி தலைமை வகிக்கிறாா். இதில் உறுப்பினா்களாகஅலே முகமது இக்பால், அசோக் கோயல், குல்வந்த் ராணா, மனோஜ் குமாா் ஷோக்கீன், நீலம் பஹல்வான், புனா்தீப் சிங் சாவ்னி, ஷியாம் ஷா்மா மற்றும் சூா்ய பிரகாஷ் காத்ரி ஆகியோா் உள்ளனா்.
மூத்த குடிமக்கள் நலனுக்கான சிறப்புக் குழுவில் திலக் ராம் குப்தா தலைமை தாங்குகிறாா். மேலும் அதன் உறுப்பினா்களாக ஜிதேந்தா் மகாஜன், கா்தாா் சிங் தன்வாா், ஓம் பிரகாஷ் ஷா்மா, பவன் சா்மா, ராம் சிங் நேதாஜி, சதீஷ் உபாத்யாய், உமாங் பஜாஜ் மற்றும் வீா் சிங் திங்கன் உள்ளனா்.