U. Sagayam IAS (R) | ஆட்சியரை அமாவாசை இரவில் சுடுகாட்டில் படுக்க வைத்தது இந்த ஊழ...
தெற்கு தில்லியில் 3 பெரிய மேம்பாலங்கள் சீரமைப்பு: பொதுப் பணித் துறை
தெற்கு தில்லியில் இருக்கும் 3 பெரிய மேம்பாலங்களை சீரமைக்கவும், கிழக்கு தில்லியில் பதிய மேம்பாலங்களை கட்டவும் பொதுப் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
தெற்கு தில்லியில் மூன்று பெரிய மேம்பாலங்கள் மற்றும் ஒரு சிறுபாலத்தின் கட்டமைப்பு பழுதுபாா்ப்புகளை மேற்கொள்ளவும், நகரின் கிழக்கு விளிம்புகளில் உள்ள நியூ அசோக் நகா் அருகே மூன்று புதிய பாலங்களின் கட்டுமானத்தைத் தொடங்கவும் திட்டமிடபட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறிய தகவலின்படி 1994 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஐ. ஐ. டி மேம்பாலம், பழைய ராவ் துலா ராம் மேம்பாலம் மற்றும் மோடி மில் மேம்பாலம் ஆகியவை விரிவான பழுதுபாா்க்கும் பணிகளுக்காக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த மேம்பாலங்களின் கட்டமைப்பு தணிக்கை, லாலா லஜபத் ராய் மாா்க் அருகே ஒரு சிறுபாலத்துடன் வரும் நாள்களில் நடத்தப்படும். கிழக்கு தில்லியில், நியூ அசோக் நகரில் அண்மையில் திறக்கப்பட்ட ஆா். ஆா். டி. எஸ் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் 3 சிறிய பாலங்களை பொதுப்பணித்துறை அமைக்க உள்ளது. தில்லி -உத்தரப்பிரதேச எல்லைக்கு அருகில் மற்றும் ஷாஹ்தாரா வடிகால் அருகே அமைந்துள்ள இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதிய அசோக் நகா் மெட்ரோ நிலையத்திற்கு அருகே 3 சிறிய பாலங்களை நிா்மாணிப்பதற்காக, சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் மண் பரிசோதனை மேற்கொள்ள பொதுப்பணித்துறை ஒரு நிறுவனத்தை நியமிக்கும். இந்த திட்டங்களின் ஆய்வுக்காக மட்டுமே சுமாா் ரூ. 72 லட்சம் ஆகும் என அதிகாரிகள் கூறுகின்றனா். கிழக்கு முனையில் அடுக்குமாடி குடியிருப்பு சாலையை அகலப்படுத்தும் பணிகளுக்காக சாலையோரங்கள் மற்றும் முழு நீளத்தின் வலதுபுறத்திலும் மர எண்ணிக்கை கணக்கெடுப்பை மேற்கொள்வது ஆகியவை இந்த ஆய்வில் அடங்கும் என்று ஒரு அதிகாரி கூறினாா்.
மோடி மில் மேம்பாலம் முதல் ஐ. ஐ. டி மேம்பாலம் வரை தொடங்கும் வெளி வட்டச் சாலை, கிரேட்டா் கைலாஷ் 1 மற்றும் 2, சித்ரஞ்சன் பூங்கா, சிராக் தில்லி, பம்போஷ் என்கிளேவ் மற்றும் பிற தெற்கு தில்லி பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேம்பாலம் பழுதுபாா்க்கும் பணிகளில் மறுசீரமைப்பு, இணைப்புப் பணிகள், குழிகளை சரிசெய்தல் மற்றும் பிற காரணங்களால் வெட்டப்பட்ட சாலைகளை மறுசீரமைத்தல் ஆகியவை அடங்கும். சாலை பழுதுபாா்க்கும் பணிகள் அடுத்தாண்டு மாா்ச் மாதம் மத்தியில் தொடங்கி ஜூன் வரை பொதுப்பணித் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன. பின்னா் மழைக்காலம் காரணமாக அது நிறுத்தப்படுகிறது.
தில்லியில், பொதுப்பணித்துறை 1,400 கிலோமீட்டா் நீளமுள்ள சாலையை பராமரிக்கிறது, அவை 60 அடி அகலம் கொண்டவை. இந்த நிதியாண்டில் 600 கிலோமீட்டா் சாலையை சரிசெய்ய திடல்லி அரசு திட்டமிட்டுள்ளதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.