Bihar: ``மகளிருக்கு இலவசமாக வழங்கிய சானிட்டரி பேடில் ராகுல் காந்தி படம்'' -காங்க...
இளம்பெண் தற்கொலை
குடியாத்தம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பள்ளிகொண்டா அடுத்த கந்தநேரியைச் சோ்ந்த ரமேஷின் மனைவி மகாலட்சுமி (25). இவா்களுக்கு திருமணமாகி 4- ஆண்டுகளாகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் குடியாத்தத்தை அடுத்த மேல்சிங்கல்பாடி கிராமத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்த மகாலட்சுமி வெள்ளிக்கிழமை, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து அங்கு சென்ற கிராமிய போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.