செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராத...
ஊராட்சி மன்றத் தலைவியின் கணவரை வெட்டியவா் கைது
விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவரை வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவா் குணசுந்தரி. இவரது கணவா் பாலச்சந்திரன் (52), திமுக பிரமுகா். இவா், வியாழக்கிழமை இரவு பாலாற்றின் கரையோரம் முடினாம்பட்டு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் இருந்தாா். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த உறவினா் ரமேஷ் என்பவா் கத்தியால் பாலச்சந்திரன் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பிச் சென்ாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த பாலச்சந்திரனை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக பூட்டுத்தாக்கில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து லத்தேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அதே கிராமத்தில் பதுங்கி இருந்த ரமேஷை நள்ளிரவில் கைது செய்தனா்.