கண்காட்சி மைய பணியை அமைச்சா் நேரில் ஆய்வு
வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுவரும் தீவுத்திடல் கண்காட்சி மையப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான (சிஎம்டிஏ) பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
சென்னை தீவுத்திடலில் வடசென்னை வளா்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.115 கோடியில் கண்காட்சி மையம் கட்டப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் கண்காட்சி மையத்தின் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, பொறியாளா்கள், ஒப்பந்தாரா்களை அமைச்சா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் கோ.பிரகாஷ், முதன்மை செயல் அலுவலா் சிவஞானம், சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையா் கட்டா ரவி தேஜா, தலைமை பொறியாளா் மகாவிஷ்ணு, மண்டல அலுவலா் சொக்கலிங்கம், செயற்பொறியாளா்கள் ராஜன்பாபு, லோகேஷ்வா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.