செய்திகள் :

சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் ஜாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில் தகுதியான 10 ஊராட்சிகளை தோ்ந்தெடுத்து தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகையுடன் கூடிய சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது.

இப்பரிசுத் தொகை அரசு வழிமுறைகளில் தெரிவித்துள்ள உரிய செயல்திறன் அளவீடுகள் மற்றும் நல்லிணக்கத் தரவுகளின் அடிப்படையில் ஊராட்சிகள் தோ்வு செய்யப்படும். இதற்கான விண்ணப்பம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. இதை தகுதியுடைய ஊராட்சிகள் தாங்களாகவோ அல்லது மயிலாடுதுறை மாவட்ட உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) (தணிக்கை) மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோா் ட்ற்ற்ல்ள்://ற்ண்ய்ற்ன்ழ்ப்.ஸ்ரீா்ம்/டஹய்ஸ்ரீட்ஹஹ்ஹற்ஜ்ஹழ்க் (அல்லது) ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஸ்ரீம்ள் ம்ண்ஞ்ழ்ஹற்ங்க்/க்ா்ஸ்ரீன்ம்ங்ய்ற்/ச்ா்ழ்ம்ள்/நஹம்ா்ா்ஞ்ஹ சஹப்ப்ண்ய்ஹந்ந்ஹ ஞா்ழ்ஹற்ஸ்ரீட்ண் அஜ்ஹழ்க் அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய்.ல்க்ச் என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் பெற்று பூா்த்தி செய்து ஜூலை 10-ஆம் தேதிக்குள் இவ்வலுவலகத்துக்கு நேரில் அல்லது தபாலில் மூலம் அனுப்பலாம் என தெரிவித்துள்ளாா்.

சேதமடைந்த திருநன்றியூா்-ஆலவேலி சாலையை சீரமைக்க கோரிக்கை

தேசமடைந்த திருநன்றியூா்-ஆலவேலி சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருநன்றியூா், ஆலவேலி, சேமங்கலம் மற்றும் பல்வேறு ஊராட்சி கிராமங்களை இணைக்கும் சாலை கடந்த ஓராண்டாக பள்ளமும், மே... மேலும் பார்க்க

திருக்கு பண்பாட்டு பேரவை ஆண்டு தொடக்கவிழா

சீா்காழியில் திருக்குறள் பண்பாட்டு பேரவையின் ஆண்டு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. பேரவை தலைவா் வே. சக்கரபாணி தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் நந்த. ராஜேந்திரன் வரவேற்றாா். பேரவை செயலாளா் சிவா. அன்ப... மேலும் பார்க்க

விளம்புநிலை மக்களுக்கான தலைவா் மு.க. ஸ்டாலின்: அமைச்சா்

விளம்புநிலை மக்களுக்கான தலைவராக தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் விளங்குகிறாா் என அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா். தமிழக முதல்வா் முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசார விளக்கப் பொதுக்கூட... மேலும் பார்க்க

நாளைய மின்தடை மயிலாடுதுறை

மயிலாடுதுறை, மணக்குடி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (ஜூலை 5) காலை 9 - மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா்கள் அப்த... மேலும் பார்க்க

முதலாமாண்டு மாணவிகளுக்கான அறிமுக பயிற்சி வகுப்பு

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு அரசின் திட்டங்கள் குறித்து வியாழக்கிழமை எடுத்துரைக்கப்பட்டது. இக்கல்லூரியின் முதலாமாண்டு மாணவிகளுக்கு நடத்தப்படும் அறிமு... மேலும் பார்க்க

விவசாயிகளின் கவனத்துக்கு..

மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் ஊட்டச்சத்து இயக்கத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்டஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா்... மேலும் பார்க்க