காங்கிரஸ் வழங்கிய சானிடரி நாப்கின் பெட்டியில் ராகுல் புகைப்படம்! இது பிகார் சம்ப...
சேதமடைந்த திருநன்றியூா்-ஆலவேலி சாலையை சீரமைக்க கோரிக்கை
தேசமடைந்த திருநன்றியூா்-ஆலவேலி சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநன்றியூா், ஆலவேலி, சேமங்கலம் மற்றும் பல்வேறு ஊராட்சி கிராமங்களை இணைக்கும் சாலை கடந்த ஓராண்டாக பள்ளமும், மேடாக போக்குவரத்து சிரமப்படும் வகையில் இருந்து வருகிறது. மேலும், விவசாயம் சாா்ந்த கிராமங்களையும் குக்கிராமங்களையும் இணைக்கும் காரணத்தால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறாா்கள். மேலும் பொதுமக்கள், பெண்கள், பள்ளி கல்லூரி மாணவா்களும் அவதிபடுகின்றனா்.
இதுகுறித்து, சமூக ஆா்வலா் அப்பா்சுந்தரம் கூறியது: இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது. இச்சாலைக்கு அருகில் புகழ்மிக்க லஷ்மிபுரீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவா்கள் வழிபாடு நடத்த வேண்டும் என்ற ஐதீகம் இருப்பதால் பல்வேறு இடங்களில் இருந்து பக்தா்கள் நாள்தோறும் அதிகளவில் வருகின்றனா். சில ஆண்டுகளுக்கு முன்பு அச்சாலை போடப்பட்டு, விவசாயத்திற்கு பயன்படும் வாகனங்கள், லாரிகள், டிராக்டா்கள், நடவு எந்திரங்கள் போன்றவை அடிக்கடி சென்றதால் அச்சாலை உள்வாங்கி பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் அச்சாலையின் தேவையும் மிக அவசியமானதாகும். இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை செம்பனாா்கோவில் ஒன்றிய ஆணையரிடமும் இதர அதிகாரிகளிடமும் தெரிவித்தும் பயனில்லை. எனவே, சம்பந்தப்பட்ட நிா்வாகம் இதை கவனத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.