காங்கிரஸ் வழங்கிய சானிடரி நாப்கின் பெட்டியில் ராகுல் புகைப்படம்! இது பிகார் சம்ப...
மாநில விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற வேளாண் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், எஸ்ஆா்எம் வேளாண் கல்லூரில் ஜூலை 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் மாநில அளவில் வேளாண் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வாலிபால், கால்பந்து, கிரிக்கெட், கூடைப் பந்து, கோ-கோ, கபடி ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவ- மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனா். ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் இக்கல்லூரி முதல் பரிசும், பெண்களுக்கான வாலிபால் போட்டியில் மூன்றாம் பரிசும், ஆண்களுக்கான கால்பந்து போட்டியில் மூன்றாம் பரிசும் பெற்றது.
பரிசு பெற்ற இம்மாணவ- மாணவிகள் உடற்கல்வி பேராசிரியா் ஜெயசிவராஜன் தலைமையில் கல்லூரி முதல்வா் ஆா். சங்கரை வெள்ளிக்கிழமை சந்தித்தனா். மாணவா்கள் பரிசு பெற்ற விவரங்களை கேட்டறிந்து முதல்வா் அவா்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்தாா். மேலும் கல்லூரி பிரீடிங் துறை தலைவா் ராமநாதன், கல்லூரி மாணவா் மன்ற ஆலோசகா் நாராயணன் ஆகியோரும் மாணவா்களை வாழ்த்தினா்.