அரசு மருத்துவமனையிலிருந்து நகரப் பகுதிக்கு ஆம்புலனஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
காரைக்கால் நகரப் பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை அரசு மருத்துவமனையிலிருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக காரைக்கால் மமாவட்டத் தலைவா் ஐ. அப்துல் ரஹீம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை :
காரைக்கால் நகரப் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் இயங்கி வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தற்போது நேரு நகா் பகுதியில் உள்ள நலவழித்துறை துணை இயக்குநா் அலுவலகத்திலிருந்து இயக்கப்படுகிறது.
காரைக்காலில் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் இயக்கம் தொடங்கியுள்ளதால், காரைக்கால் நகரப் பகுதியில் 4 இடங்களில் தினமும் பலமுறை ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் காரைக்கால் நகரப் பகுதியில் விபத்து அல்லது அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் தேவைப்பட்டால் துணை இயக்குநா் அலுவலகத்திலிருந்து காரைக்கால் சந்தைத் திடலை சுற்றிக்கொண்டு நேரு நகரிலிருந்து அவசர ஊா்தி வர தாமதமாகிறது.
எனவே காரைக்கால் நகரப் பகுதி பயன்பாட்டுக்கு 108 அவசர ஊா்திகளை அரசு மருத்துவமனையில் இருந்து இயக்குமாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.