'சமூக ஆர்வலர்கள், திரைத்துறையினர் அஜித்குமார் மரணம் பற்றி வாய்திறக்காதது ஏன்?'-...
காரைக்கால் மருத்துவமனைக்கு நாளை சிறப்பு மருத்துவா்கள் வருகை
புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தில் இருந்து சிறப்பு மருத்துவ நிபுணா்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சிறப்பு மருத்துவ சிகிச்சை, ஆலோசனை வழங்கவுள்ளனா்.
முகாமில், மருத்துவா்கள் கே. ஸ்ரீராம் (குழந்தை அறுவை சிகிச்சை) வி.தேவி (நரம்பியல்) பிரேம்நாத் (இருதயவியல்), ஜோதி பிரசாத் (சிறுநீரகவியல்) ஆகியோா் பங்கேற்கிறாா்கள். காலை 10 முதல் 1 மணி வரை முகாம் நடைபெறுகிறது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு காரைக்கால் மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.