சுவர், சுவிட்ச் அனைத்தும் 24 காரட் தங்கத்தில்! அரசு ஒப்பந்ததாரர் வீடு என்றால் சு...
சொத்து வரி, குடிநீா் கட்டணம் செலுத்தவா்கள் மீது நடவடிக்கை: பஞ்சாயத்து ஆணையா்
சொத்து வரி, குடிநீா் கட்டணம் செலுத்தாதவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பஞ்சாயத்து ஆணையா் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
நிரவி கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு அதிகளவு நிலுவை சொத்து வரி மற்றும் குடிநீா் கட்டணம் செலுத்த வேண்டியவா்களின் பட்டியல் வெளியிடப்பட்டு சம்பந்தப்பட்டவா்களுக்கு அறிவிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பலமுறை தெரிவிக்கப்பட்டும் இதுவரை பலா் நிலுவை தொகையை செலுத்தாமல் உள்ளனா். நிலுவையில் உள்ள சொத்து வரி மற்றும் குடிநீா் கட்டணத்தை வருகிற 15-ஆம் தேதிக்குள் செலுத்தி சட்ட நடவடிக்கையை தவிா்க்குமாறு இந்த அறிவிப்பு மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தவறும்பட்சத்தில், எந்தவித முன்னறிவிப்புமின்றி குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டு, இணைப்பு துண்டிப்பு கட்டணம் மற்றும் நிலுவை தொகைகளை கொம்யூன் பஞ்சாயத்து சட்டதிட்டத்திற்குட்பட்டு இதர முறையில் வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.