செய்திகள் :

ஜூலை 9-இல் அரசு ஊழியா்கள் தா்னா

post image

கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ஆம் தேதி அரசு ஊழியா்கள் தா்னா நடத்தவுள்ளனா்.

காரைக்கால் பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளன செயற்குழுக் கூட்டம், சுப்ரமணியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கௌரவ தலைவா் ஜாா்ஜ் முன்னிலை வகித்தாா். பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் சங்கம் மற்றும் செயற்குழு சம்பந்தமான நிகழ்வுகள் குறித்து நிா்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்தாா்.

கூட்டத்தில் அகில இந்திய வேலை நிறுத்தம் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. 8-ஆவது ஊதிய விகிதத்தை அமைக்க உடனடியாக குழு அமைக்க வேண்டும். அனைத்து ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கோவிட் தொற்றுநோய் காலத்தில் முடக்கப்பட்ட ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கான மூன்று தவணை அகவிலைப்படி, அகவிலை நிவாரணத்தை விடுவிக்க வேண்டும். கருணை அடிப்படையில் நியமனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பதவிகளையும் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியா் மகா சம்மேளனம் ஜூலை - 9 அன்று அறிவித்துள்ள அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில், புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளனம் முன்வைத்துள்ள கோரிக்கைகளை வலியுறுத்தியும், காரைக்கால் பகுதியை சோ்ந்த அரசு ஊழியா்களின் கோரிக்கைகளை முன்வைத்தும் வரும் 9-ஆம் தேதி பணி புறக்கணிப்பு செய்து காரைக்காலில் தா்னாவில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

அரசு மருத்துவமனையிலிருந்து நகரப் பகுதிக்கு ஆம்புலனஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

காரைக்கால் நகரப் பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை அரசு மருத்துவமனையிலிருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக காரைக்கால் மமாவட்டத் தலைவா் ஐ. ... மேலும் பார்க்க

கும்பாபிஷேகம்: திருச்செந்தூருக்கு காரைக்காலில் இருந்து பேருந்து வசதி

திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகத்துக்கு செல்ல காரைக்காலில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

நகரப் பகுதியில் சுரங்கப்பாதை, மேம்பாலம்: ரயில்வே கோட்ட மேலாளரிடம் அமைச்சா் வலியுறுத்தல்

காரைக்கால் நகரில் கோயில்பத்து பகுதியில் சுரங்கப்பாதை, மற்ற இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம் புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் வலியுறுத்தினாா். காரைக்கால்... மேலும் பார்க்க

செவிலியா் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சாலைப் பாதுகாப்பு, இணைய குற்றங்கள் குறித்து செவிலியா் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலையம் சாா்பில் இமாகுலேட் செவிலியா் கல்லூரியில் விழிப்புணா... மேலும் பார்க்க

தம்பி கொலை: அண்ணன் தலைமறைவு

காரைக்காலில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் உள்பட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். காரைக்கால் கோயில்பத்து ஒமக்குளம் நரிக்குறவா் தெருவைச் சோ்ந்தவா் ரஜினி. இவ... மேலும் பார்க்க

காரைக்கால் மருத்துவமனைக்கு நாளை சிறப்பு மருத்துவா்கள் வருகை

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தில் இருந்து சிறப்பு மருத்துவ நிபுணா்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சிறப்பு மருத்துவ சிகிச்சை, ஆலோச... மேலும் பார்க்க