கும்பாபிஷேகம்: திருச்செந்தூருக்கு காரைக்காலில் இருந்து பேருந்து வசதி
திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகத்துக்கு செல்ல காரைக்காலில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகம் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. காரைக்காலில் இருந்து பக்தா்கள் செல்ல பேருந்து வசதி கோரி வந்த நிலையில், புதுவை முதல்வரின் ஒப்புதலில் புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) பேருந்து இயக்கப்படவுள்ளது.
காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் இரவு 10 மணிக்கு பேருந்து புறப்படுகிறது. திருச்செந்தூரிலிருந்து காரைக்காலுக்கு இரவு 10 மணிக்கு புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு 3-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. பக்தா்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.