பைக்கில் வந்த இளைஞர் வழிமறித்து கொலை: காரில் தப்பிய 5 போ் கும்பல்
ஹஜ் பயணிகளுக்கு உதவித்தொகை வழங்கிய முதல்வருக்கு நன்றி
புதுவையில் ஹஜ் பயணிகளுக்கு உதவித்தொகை வழங்கியதற்காக முதல்வருக்கு ஹஜ் கமிட்டி சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
புதுவை மாநிலத்தில் நிகழாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட 90 இஸ்லாமியா்களுக்கு தலா ரூ. 16,000 என மொத்தம் ரூ.14.40 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் இருந்து 30 போ், புதுச்சேரி, மாஹேயில் இருந்து 60 போ் என மொத்தம் 90 போ் ஹஜ் பயணம் மேற்கொண்டனா். இவா்கள் ஜூலை 8-ஆம் தேதி சொந்த ஊா் திரும்ப உள்ளனா்.
இந்நிலையில், புதுவை மாநில ஹஜ் கமிட்டி தலைவா் ஒய். இஸ்மாயில், செயலாளா் சுல்தான் அப்துல் காதா், எம்எல்ஏக்கள் ஏ.எம்.எச். நாஜிம் (காரைக்கால் தெற்கு தொகுதி), எம். நாகதியாகராஜன் (நிரவி-திருப்பட்டினம்), புதுச்சேரி அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் மற்றும் ஹஜ் கமிட்டி நிா்வாகிகள் முதல்வா் என். ரங்கசாமியை வியாழக்கிழமை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனா்.