வண்டுவாஞ்சேரியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
வேதாரண்யம் அருகேயுள்ள வண்டுவாஞ்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட புதிய ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான கட்டடத்தை தமிழக முதல்வா் திறந்து வைத்தாா். இதையொட்டி, சுகாதார நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் குத்து விளக்கு ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. வேதாரண்யம் நகா் மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி, ஆத்ம திட்டக்குழு உறுப்பினா் உதயம். முருகையன், சுகாதாரத் துறை மாவட்ட அலுவலா் பிரதீப் கிருஷ்ணகுமாா், வட்டார மருத்துவ அலுவலா் சுந்தரராஜன், மருத்துவா் இலக்கியா, பெற்றோா் ஆசிரியா் கழக மாவட்ட இணைச் செயலாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
