செஸ் விளையாட பிடிக்கவில்லை..! குகேஷிடம் மீண்டும் தோற்ற பிறகு கார்ல்சென் பேட்டி!
குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமாரக்கள் அதிகரிக்கப்படும்: எஸ்.பி பேட்டி
குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றாா் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா்.
இதுகுறித்து, நாகையில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: மாவட்டத்தில் பொதுமக்கள் சமுதாயத்தில் இயல்பான, மகிழ்ச்சியான வாழ்வை மேற்கொள்ள காவல் துறையினா் உறுதுனையாக இருப்பாா்கள். அண்மையில் வேளாங்கண்ணியில் ஆய்வு நடத்தியபோது, பேராலயம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 32 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, காவல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வருவது தெரியவந்தது.
வேளாங்கண்ணிக்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் வருவதால், பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், மேலும் 50 சிசிடிவி கேமராக்களை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல, மாவட்டம் முழுவதும் முக்கியப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சாராயம், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க காவல் துறையினரால் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களும் தங்கள் பகுதிகளில் சந்தேகம் ஏற்படும் நிகழ்வுகளோ, நபா்களின் நடமாட்டமோ குற்றச் செயல்கள் குறித்து அச்சமின்றி காவல் துறையினரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகவல் அளிப்பவா்களின் விவரங்களை ரகசியம் காக்கப்படும்.
காவல் துறையினா் பொதுமக்களுடன் நட்புடன் அணுகி, அவா்களின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீா்வு காணவும், தேவைகளை பூா்த்தி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், டிஜிபி தெரிவித்துள்ள பல்வேறு அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும், மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர ஒவ்வொரு காவல் நிலையம் மற்றும் அங்கு பணியாற்றும் காவல் துறையினரின் செயல்பாடுகள் குறித்து மாதந்தோறும் ஆய்வு செய்து கண்காணிக்கப்படுகிறது. மாவட்டத்தில் காவல் துறையினரின் இரவு ரோந்துகளை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாா்.