ஷுப்மன் கில் சதம் விளாசல்; முன்னாள் இந்திய கேப்டனின் சாதனை முறியடிப்பு!
இஸ்ரேல் - காஸா போர்நிறுத்தம்? ஹமாஸின் அறிவிப்பால் மத்தியஸ்தர்கள் மகிழ்ச்சி!
காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
காஸாவில் 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான முன்மொழிவுக்கு சாதகமான பதிலை அளித்திருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. முன்மொழிவில் சில திருத்தங்களை மட்டும் ஹமாஸ் மேற்கொண்டதாகத் தெரிகிறது.
இதனையடுத்து, 2023-ல் தொடங்கப்பட்ட போர் முடிவுக்கு வருகிறதென்றால், பேச்சுவார்த்தைக்கு முழுமையாக தயாராக இருப்பதாக மத்தியஸ்தர்கள் கூறினர்.
இதுகுறித்து, ஹமாஸுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பாலஸ்தீன - அமெரிக்க பேச்சாளர் பிஷாரா பாஹ்பா, இந்த சபிக்கப்பட்ட போரை முடிவுக்கு கொண்டு வருவதை நெருங்கி விட்டோம். முன்மொழிவின் திருத்தங்கள், போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தடுக்காது என்று நினைக்கிறேன் எனக் கூறினார்.
இதனிடையே, ஹமாஸின் பதில் வெளிவந்த பின்னர், அடுத்த வாரமே காஸாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமையில் கூறியிருந்தார். இந்த நிலையில், ஹமாஸின் சாதகமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Hamas submits positive response to US-backed Gaza ceasefire deal