`மராத்தியத்தின் இந்தி எதிர்ப்பு சூறாவளி உற்சாகம் தருகிறது..!' - முதல்வர் ஸ்டாலின...
பௌத்த, சீக்கியர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவியுடன் யாத்திரை திட்டம்: யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேசத்தில் பௌத்த, சீக்கிய பக்தர்களுக்கு ஆன்மிக பயணத்தை எளிதாக்கும் வகையில் இரண்டு யாத்திரை உதவித் திட்டங்களைத் தொடங்க அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
மறு ஆய்வுக் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் கூறுகையில், புனித யாத்திரைகள், ஆன்மிக மேம்பாடு மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான ஒரு வழியாகும், மேலும் குடிமக்கள் தங்கள் நம்பிக்கையுடன் தொடர்புடைய இடங்களை அடைவதற்கு உதவுவது அரசின் பொறுப்பு என்று அவர் கூறினார்.
பௌத்த தீர்த்த தரிசன யோஜனாவின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய யாத்திரைத் தலங்களைப் பார்வையிடப் பௌத்த பக்தர்கள், குறிப்பாகத் துறவிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும்.
இதேபோல், 'பஞ்ச் தக்த் யாத்ரா யோஜனா' உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சீக்கிய பக்தர்களின் ஐந்து புனிதத் தலங்களான ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப், ஸ்ரீ அகல் தக்த் சாஹிப், ஸ்ரீ தம்தாமா சாஹிப், ஸ்ரீ தக்த் சச்கண்ட் ஸ்ரீ ஹசூர் சாஹிப் மற்றும் ஸ்ரீ ஹர்மந்திர் ஜி சாஹிப் (பாட்னா சாஹிப்) ஆகியவற்றைப் பார்வையிடவும் இந்த நிதியுதவி வழங்கப்படும்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சீக்கிய பக்தர்கள் ஐந்து புனித தக்த் சாஹிப் தலங்களான ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப், ஸ்ரீ அகல் தக்த் சாஹிப், ஸ்ரீ தம்தாமா சாஹிப், ஸ்ரீ தக்த் சச்கண்ட் ஸ்ரீ ஹசூர் சாஹிப் மற்றும் ஸ்ரீ ஹர்மந்திர் ஜி சாஹிப் (பாட்னா சாஹிப்) ஆகியவற்றைப் பார்வையிட உதவும்.
இந்த இரண்டு திட்டங்களிலும், பக்தர்களுக்கு தலா ரூ.10,000 மானியம் பெறுவார்கள். இந்த மானியம் பெறுவதற்கான விண்ணப்ப செயல்முறை முழுவதுமாக இணையத்தில் வைக்கப்பட வேண்டும் என்றும், பொருளாதார ரீதியாகப் பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டார்.
இந்தத் திட்டங்கள் ஐ.ஆர்.சி.டி.சி உடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
பாதுகாப்பு, வசதி மற்றும் மத நம்பிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஆதித்யநாத், இந்த முயற்சிகள் உள்ளடக்கிய வளர்ச்சியின் உணர்வை மேலும் அதிகரிக்கும் என்றும், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ் தேசிய ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.