ஷுப்மன் கில் சதம் விளாசல்; முன்னாள் இந்திய கேப்டனின் சாதனை முறியடிப்பு!
அச்சுதானந்தன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மாரடைப்பு மற்றும் வயது தொடர்பான உடல்நலக் குறைவால் அவர் ஜூன் 23ஆம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அச்சுதானந்தன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், 101 வயதான அச்சுதானந்தன் தீவிர சிகிசைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
எனினும், அவரது சிகிச்சை குறித்து கூடுதல் விவரங்கள் செய்திக் குறிப்பில் வழங்கப்படவில்லை. கேரள அரசியலில் முக்கிய நபரான அச்சுதானந்தன், சமீபத்திய ஆண்டுகளில் பெரும்பாலும் பொது வாழ்க்கையிலிருந்து விலகியே இருந்தார்.
மேலும் அவர் 2006 முதல் 2011 வரை மாநில முதல்வராகவும் பதவி வகித்துள்ளார்.
மார்வெல் சூப்பர் வில்லன் நடிகர் ஜூலியன் மெக்மஹோன் மரணம்!
Former Kerala Chief Minister V S Achuthanandan continues to remain in the Intensive Care Unit (ICU) of a private hospital, with no improvement in his condition, hospital sources said.