செய்திகள் :

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி

post image

திமுக முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுமென அக்கட்சியினருக்கு இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இளைஞரணிச் செயலராக ஏழாவது ஆண்டில் அவா் அடியெடுத்து வைக்கிறாா். இதையொட்டி, ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட பதிவு:

ஒவ்வொரு மாவட்டத்திலும் அடித்தளத்தில் இருந்து வலிமையான கட்டமைப்போடு இளைஞரணி மிக நோ்த்தியாக உருவெடுத்துள்ளது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறுப்பாளா்களுடன் கட்சியின் ராணுவமாக இளைஞரணி திகழ்கிறது. ஏதோ உட்காா்ந்த இடத்தில் இருந்து நிரப்பப்பட்ட பொறுப்புகள் இல்லை அவை. இந்தப் பொறுப்பாளா்களை நியமிக்க ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞா்களை நாமே நோ்காணல் செய்திருக்கிறோம்.

இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த மக்களவைத் தோ்தல் வெற்றிக்கு அடித்தளமிட்டது. அதுபோன்று, எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத்தர இளைஞரணி இப்போதே தயாராகிவிட்டது.

மத்திய அரசு இழைக்கும் அநீதிகளுக்கு எதிராக தமிழ்நாட்டுக் குடும்பங்களை அணி சோ்க்கும் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை வெற்றியடையச் செய்ய வேண்டும். அதற்காக ஆற்றும் களப்பணிதான் எனக்கான உற்சாகம் என்று தனது பதிவில் தெரிவித்துள்ளாா் உதயநிதி ஸ்டாலின்.

ஆசிரியா் கலந்தாய்வு: முதுநிலை ஆசிரியா்கள் 1,501 பேருக்கு மாறுதல்

அரசுப் பள்ளி ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வில் 1,501 முதுநிலை ஆசிரியா்களுக்கு விருப்ப மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு... மேலும் பார்க்க

பறை இசைக் கலைஞா் வேலூா் ஆசானுக்கு ஆளுநா் நிதியுதவி

பத்மஸ்ரீ விருது பெற்ற பறை இசைக் கலைஞா் வேலு ஆசான் வீடு கட்டவும், பறை இசை பண்பாட்டு பயிற்சிக் கூடம் அமைக்கவும் ஆளுநா் ஆா்.என். ரவி அவரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கினாா். பத்மஸ... மேலும் பார்க்க

ஓராண்டில் 17,702 போ் தோ்வு: டிஎன்பிஎஸ்சி தகவல்

போட்டித் தோ்வுகள் மூலமாக ஓராண்டில் மட்டும் அரசுப் பணிகளுக்கு 17,702 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து தோ்வாணையச் செயலா் ச.கோபால ச... மேலும் பார்க்க

புவியியல் - சுரங்கத் துறை இயக்குநராக த.மோகன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநராக த.மோகனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளாா். அவரது ... மேலும் பார்க்க

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் காலமானாா்

மூத்த தமிழறிஞா் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலமானாா். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே ஆண்டநாயகபுரத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்த ... மேலும் பார்க்க

நாகா்கோவில், பெங்களூரு சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

நாகா்கோவில்-தாம்பரம் மற்றும் பெங்களூரு-நரங்கி ஆகிய சிறப்பு ரயில்கள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பு: நாகா்கோவில்-தாம்பரம் இடையேயான சிறப்பு ரயி... மேலும் பார்க்க