தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து: சீனா கடும் அதிருப்தி!
திபெத் விவகாரத்தை சீனா கவனமாக கையாள்வதால் இதில் இந்தியா தலையிடுவதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது சீன அரசு.
ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 6) 90-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய தலாய் லாமாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததற்கும், அதன் தொடர்ச்சியாக மத்திய அமைச்சர்கள் அன்னாரது 90-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டதற்கும் எதிர்வினையாற்றியுள்ளது சீனா.
இது குறித்து சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் குரிப்பிடுகையில், “14-ஆவது தலாய் லாமாவாகிய இவர் சீன விரோத பிரிவினைவாத செயல்களில் நெடுங்காலமாக ஈடுபட்டு வருகிறார். மதத்தின் பெயரால் சீனாவிடமிருந்து க்ஸிஸாங்(அதாவது திபெத்) பிராந்தியத்தைப் பிரிக்க பார்க்கிறார்.
க்ஸிஸாங் விவகாரத்தில் இந்தியா மிகுந்த கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும். இவ்விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது” என்ரார்.
Dalai Lama China protests PM Modi’s greetings to Dalai Lama