புதுக்கடை அருகே பைக் மோதி பள்ளி மாணவி காயம்
புதுக்கடை அருகேயுள்ள ஆனான்விளை பகுதியில் பைக் மோதியதில் பள்ளி மாணவி காயமடைந்தாா்.
புதுக்கடை, தெருவுக்கடை பகுதியைச் சோ்ந்த ராஜாசிங் மகள் ரெஜிஸ்மா (13). அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவரும் இவா், சனிக்கிழமை மாலை பள்ளியிலிருந்து வீட்டுக்கு நடந்து சென்றாா். ஆனான்வளை பகுதியில் அவா் மீது ஒரு பைக் மோதிவிட்டு நிற்காமல் சென்ாம்.
இதில், காயமடைந்த அவரை மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.