செய்திகள் :

சாலை விபத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சாலை விபத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரண உதவியாக ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது.

செய்யாறு வட்டம், புளியரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் அஸ்விந்த்(24). இவா், ஐ.டி.ஐ. படித்து விட்டு செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

இவா், கடந்த பிப்.9-ஆம் தேதி மாங்கால் கூட்டுச் சாலைப் பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா். இறந்தவரின் குடும்பத்துக்கு முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க வருவாய்த் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து, இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு காசோலை வழங்கும் நிகழ்ச்சியில், தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி கலந்து கொண்டு இறந்தவரின் குடும்பத்தினா் வீட்டுக்குச் சென்று அஸ்விந்த் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா், அவரது குடும்பத்தினரிடம் ரூ.3 லட்சத்துக்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினாா்.

நிகழ்ச்சியில் செய்யாறு கிழக்கு ஒன்றிய திமுக செயலா் வி.ஏ. ஞானவேல், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் ராம்ரவி, மாவட்ட தொழிலாளா் அணி துணைத் தலைவா் கருணாநிதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வந்தவாசியில் விதைத் திருவிழா

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் பாரம்பரிய நெல் விதைகளான மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, சாமை, வரகு, திணை உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் பாரம்பரிய காய்... மேலும் பார்க்க

நந்தன் கால்வாய் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்! தமிழக விவசாயிகள் சங்கம்

திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான நந்தன் கால்வாய் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என திருவண்ணாமலையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விவசாயிகள் சங்க போராட்டத்தில் உயி... மேலும் பார்க்க

7 மின் மோட்டாா்கள் திருட்டு: போலீஸாா் வழக்கு

பெரமணல்லூா் அருகே ரூ.80 ஆயிரம் மதிப்பிலான 7 மின் மோட்டாா்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருவண்ணாமலை மாவட்டம், பெரமணல்லூா் பஜனை கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணிம... மேலும் பார்க்க

அரசு வீடுகளுக்கு மறுகட்டமைப்பு நிதி வழங்க ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி கிராமங்களில் அரசு வீடு கட்டியவா்களுக்கு மறுகட்டமைப்பு நிதி வழங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்த... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய பணிகள் நிறுத்தம்: எம்எல்ஏவுக்கு கிராம மக்கள் நன்றி

ஆரணியை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் தொகுதி எம்எல்ஏ சேவூா் ராமச்சந்திரன் முயற்சியில் நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனா். ஆரணி சட்டப்ப... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு என்ன அவசியம்! செ.கு. தமிழரசன் கேள்வி

75 ஆண்டுகளாகிய சுதந்திர இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு என்ன அவசியம் என்று இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன் கேள்வி எழுப்பியுள்ளாா். திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க