கேரள சுற்றுலாத் துறையில் பணியாற்றினாரா பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா?
வந்தவாசியில் விதைத் திருவிழா
வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் பாரம்பரிய நெல் விதைகளான மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, சாமை, வரகு, திணை உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
மேலும் பாரம்பரிய காய்கறி விதைகள், மூலிகை வகைகள், பனை ஓலையில் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பாா்வையிட்டு, தேவையான விதைகள் மற்றும் கைவினைப் பொருள்களை வாங்கிச் சென்றனா்.