Dhoni : 'தன்னலமற்ற தலைவன்; அரசியல் தெளிவுமிக்க வீரன்!' - தோனி ஏன் இன்றைக்கும் கொ...
7 மின் மோட்டாா்கள் திருட்டு: போலீஸாா் வழக்கு
பெரமணல்லூா் அருகே ரூ.80 ஆயிரம் மதிப்பிலான 7 மின் மோட்டாா்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், பெரமணல்லூா் பஜனை கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணிமாறன். இவா், இரகுநாத சமுத்திரம் கிராமத்தில் தனியாா் நிலத்தில் சாலை அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் தாா்பிளான்ட் வைத்து கடந்த 8 மாதங்களாக தொழில் செய்து வருவதாகத் தெரிகிறது.
மேலும் தாா் பிளான்டுகள் பயன்பாட்டுக்காக 7 மின் மோட்டாா்களை வைத்திருந்தாராம். சுமாா் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான இந்த மின் மோட்டாா்களை அடையாளம் தெரியாத நபா்கள் ஜூன் 30-ஆம் தேதி திருடிச் சென்ாகத் தெரிகிறது.
இதுகுறித்து மணிமாறன் பெரணமல்லூா் போலீஸில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் லதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.