செய்திகள் :

கரூர்: வழக்கறிஞரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக அதிமுக நிர்வாகி கைது; மா.செ காட்டம்; நடந்தது என்ன?

post image

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்ஸ் கிரிப்ஸ்சன் என்பவர் கரூர் கோதூர் பகுதியில் 7 ஏக்கர் நிலம் வாங்குவது தொடர்பாக, கரூரைச் சேர்ந்த ஆர்.எஸ்.ராஜா என்ற நில தரகரிடம் முன்பணமாக, ரூ.96 லட்சம் கொடுத்துள்ளார்.

ஒரு மாத காலத்திற்குள் கிரயம் செய்து தருவதாகக் கூறிவிட்டு அந்த நிலத்தை வேறொரு நபருக்கு விற்றுள்ளார். இந்நிலையில், நில தரகர் ஆர்.எஸ்.ராஜா, ரூ.96 லட்சத்தைத் திரும்ப பிரின்ஸ் கிப்ஸனிடம் கொடுத்தபோது, அதனைப் பெற மறுத்ததாகவும், நிலம்தான் வேண்டுமென்று தென் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, ஆர்.எஸ். ராஜா, அ.தி.மு.க பிரமுகரும், கரூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவருமான பாலமுருகன் (வயது 52) என்பவரை அணுகி பிரச்னையை முடித்து தரும்படி கூறியுள்ளார்.

m.r.vijayabaskar

அதன்படி, கரூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் ரகுநாதர் என்பவர் மூலம் ரூ. 96 லட்சத்தை பிரின்ஸ் கிப்ஸனிடம் வழங்குவதற்காக பாலமுருகனிடம் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக, வழக்கறிஞர் ரகுநாதன் பாலமுருகனைப் பலமுறை தொடர்பு கொண்டபோது, தனது அரசியல் செல்வாக்கை வைத்து, 'பணம் கொடுக்க முடியாது. உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள்' என மிரட்டியதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லாவிடம் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் அ.தி.மு.க பிரமுகர் பாலமுருகன் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர்,

"தி.மு.க-வினர் தூண்டுதல் பேரில், அ.தி.மு.க பிரமுகர் பாலமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். பாலமுருகன் வாங்கிய பணத்தைத் திருப்பி கொடுக்க ஒப்புக்கொண்டார். புகார் கொடுத்தவரும் பணத்தைப் பெற்று பிரச்னையை முடித்துக் கொள்ளத் தயாராக இருக்கும்பொழுது காவல்துறை உள்ளே நுழைந்து, அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர் என்பதால் கைது செய்துள்ளனர்.

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்

கரூர் மாவட்டத்தில் வாங்கல் காவிரி ஆற்றில் காவல்துறை உதவியுடன் மணல் கொள்ளை நடைபெறுகிறது. கந்துவட்டி கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நான் உட்பட என்னுடன் அமர்ந்திருப்பவர்களும் தி.மு.க-வினர் தூண்டுதல் பேரில், பல்வேறு வழக்குகளில் கரூர் மாவட்ட காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று திரும்பி உள்ளோம்.

நீதிமன்றம் வார விடுமுறை நாளில் அ.தி.மு.க-வினரைக் கைது செய்வது ஒன்றும் கரூர் மாவட்டத்தில் புதிதான நடவடிக்கை அல்ல. இது போன்ற அரசியல் நாங்களும் செய்வோம். எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயார்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

பதின்பருவ மாணவர் மர்ம மரணம்; தன்பாலின உறவில் ஏற்பட்ட பிரச்னை காரணமா? - இளைஞரிடம் போலீஸார் விசாரணை

மும்பை மேற்கு பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவர் காலை வெளியே சென்றவர், நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. இரவும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தந்தை தனது மகனை பல இடங்களில் தேடினர். அந்த மாணவர், அ... மேலும் பார்க்க

டேட்டிங் ஆப்பில் நெருக்கம்; ஹோட்டலுக்கு சென்ற இளைஞரிடம் கைவரிசை காட்டிய கும்பல்.. 21 பேர் கைது!

டேட்டிங் செயலி மூலம் ஆண், பெண் அறிமுகமாகி நண்பர்களாகின்றனர். இந்த நட்பு சில நேரத்தில் விபரீதத்தில் முடிந்து விடுகிறது. இந்த டேட்டிங் ஆப் பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்... மேலும் பார்க்க

`அன்று அதை விரும்பவில்லை, கட்டாயபடுத்தி உறவுகொண்டதால்...' - புனே பாலியல் புகாரில் திருப்பம்

புனே கொண்ட்வா பகுதியில் கடந்த வாரம், புதன்கிழமை கூரியர் கொண்டு வந்த நபர் தனியாக இருந்த 22 வயது பெண்ணின் முகத்தில் ஸ்பிரே அடித்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் புகார்... மேலும் பார்க்க

ஊட்டி: 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; கொடூர ஆசிரியர் சஸ்பெண்டு-வேகமெடுக்கும் அடுத்தக்கட்ட விசாரணை!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் காவல்துறை சார்பில் மாணவிகளுக்கு பாலியல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றிருக்கிறது. நிகழ்ச்சி முடிந்ததும் ... மேலும் பார்க்க

மூளி தேவி: சப் இன்ஸ்பெக்டராக மாறுவேடமிட்டு போலீஸ் அகாடமியிலேயே 2 ஆண்டுகள் சுற்றிய பெண் - யார் இவர்?

ராஜஸ்தான் போலீஸ் அகாடமி உள்ளேயே இரண்டு ஆண்டுகள் சப்-இன்ஸ்பெக்டர் போல மாறுவேடம் போட்டு திரிந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் பயிற்சி அமர்வுகளில் பங்கேற்றுள்ளார், அதிகாரப்பூர்வ சீருடைகள் அணிந்து வலம... மேலும் பார்க்க

``காவல்துறையினர் அடித்துக் கொன்றனர்'' - நீதிமன்றத்தில் முறையிட்ட உறவினர்; 6 பேர் மீது FIR பதிவு

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்தவர் வாசிம்(22). இவர் ஜிம்மில் பயிற்சியாளராக பணியாற்றினார். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி மதோபூரில் உள்ள ஒரு குளத்தில் இறந்து கிடந்தார். இது ... மேலும் பார்க்க