Delhi Fuel Ban: கைதிகளிடம் Lie Detector Test மூலம் உண்மையை கண்டறிய முடியாதா? | I...
கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய பணிகள் நிறுத்தம்: எம்எல்ஏவுக்கு கிராம மக்கள் நன்றி
ஆரணியை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் தொகுதி எம்எல்ஏ சேவூா் ராமச்சந்திரன் முயற்சியில் நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனா்.
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கண்ணமங்கலம் அருகேயுள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கண்ணமங்கலம் பேரூராட்சி நிா்வாகத்தினா் பணிகளைத் தொடங்கினா்.
இதற்கு அய்யம்பாளையம் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இருப்பினும், போலீஸாா் பாதுகாப்புடன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் முறையிட்டனா். இதையடுத்து எம்எல்ஏ நேரில் சென்று பணி நடைபெறும் இடத்தை பாா்வையிட்டாா்.
அப்போது, அப்பகுதி மக்கள் எம்எல்ஏ சேவூா் எஸ். ராமச்சந்திரனிடம், இப்பகுதியில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் கிராமத்துக்கு பாசன வசதிக்கு தண்ணீா் வர வழியில்லை. மேலும், ஏரிக்கால்வாயை அடைத்து பணியை மேற்கொள்கின்றனா் என புகாா் தெரிவித்தனா். இதையடுத்து எம்எல்ஏ மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து தெரிவித்து,
கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அய்யம்பாளையம் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சேவூா் ராமச்சந்திரன் எம்எல்ஏவை அவரது அவரது அலுவலகத்தில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனா்.