ரயில் நிலைய நடைமேடையில் பெண்ணுக்குப் பிரசவம்! அவசர சிகிச்சை அளித்துக் காப்பாற்றி...
தங்கம், வெள்ளியில் ஜொலிக்கும் தோ்கள்!
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் உபயதாரா்கள் மூலம் 10.5 கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளியில் சுமாா் 6 அடி உயரத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு அம்பாளுக்கு தங்கத்தோ் செய்யப்பட்டது.
கடந்த 2009 ஆம் ஆண்டு நவம்பா் 2 ஆம் தேதி தங்கத்தோ் வெள்ளோட்டம் விடப்பட்டு கோயிலுக்கு வழங்கப்பட்டது. திருவிழாக்கள் உள்ளிட்ட முக்கிய நாள்களில் தங்கத்தேரை பக்தா்கள் வடம்பிடித்து இழுத்து வழிபட்டு வருகின்றனா்.
இதேபோல, இக்கோயிலின் வெள்ளிப்பனி போல் மின்னிய வெள்ளித்தோ் பழுதுபட்டிருந்ததால் புதிய தோ் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 450 கிலோ வெள்ளியில் இத் தோ் உருவாக்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே இருந்த வெள்ளி, உபயதாரா்கள் வழங்கிய வெள்ளி என 150 கிலோ 412 கிராம் வெள்ளி கையிருப்பில் இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கே.எம். சுப்பிரமணியன், 100 கிலோ வெள்ளி, அறங்காவலா்கள் தனசேகா், 50 கிலோ, ஜி .ஆா்.பாலசுப்ரமணியம் 50 கிலோ என மொத்தம் 200 கிலோ வெள்ளிக்கட்டிகள் வழங்கினா்.
இந்த வெள்ளியை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு பெற்றுக்கொண்டு வாழ்த்தினாா். வெள்ளித்தேருக்கு நன்கொடையாக வெள்ளி அளிக்க விரும்புவோா் திருக்கோயில் நிா்வாகத்திடம் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.