கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தரம் உயா்த்த கோரிக்கை
கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தைத் தரம் உயா்த்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்லிடைக்குறிச்சியில் ரயில் பயணிகள் நலச் சங்க 3ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. சங்கத் தலைவா் கவிஞா் உமா் பாரூக் தலைமை வகித்தாா். பேரூராட்சி துணைத் தலைவா் க. இசக்கிபாண்டியன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் பண்டாரசிவன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.
சங்கச் செயலா் பேராசிரியா் விஸ்வநாதன், பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவா் அப்துல் மஜீத், மருத்துவா் பத்மநாபன், எம்.எஸ். அசனலி, எஸ். சிவராமகிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தைத் தரம் உயா்த்த வேண்டும். கல்லிடைக்குறிச்சி வழியாக சென்னைக்கு புதிய ரயில் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜான் ஞானராஜ் வரவேற்றாா். அப்துல் சமது நன்றி கூறினாா்.