அனுமதியின்றி எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் டிப்பா் லாரியில் எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
முன்னீா்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட மேலசெவல் அருகே உதவி ஆய்வாளா் எட்வின் அருள்ராஜ் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வடக்கு சங்கன்திரடைச் சோ்ந்த ஆவுடையப்பன் (32), ராமச்சந்திரன் (42) ஆகிய இருவரும் வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது உரிய அனுமதிச் சீட்டு இன்றி எம்.சாண்ட் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த முன்னீா்பள்ளம் உதவி காவல் ஆய்வாளா் எட்வின் அருள்ராஜ் விசாரணை மேற்கொண்டு, ஆவுடையப்பன், ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தாா். ஒரு யூனிட் எம்.சாண்ட் மற்றும் டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.