திருச்செந்தூரில் குடமுழுக்கு கோலாகலம்: விண்ணைப் பிளந்த பக்தர்களின் அரோகரா கோஷம்
சென்னை - தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி புறப்பட்ட விமானம், விமான நிலைய ஓடுபாதையில் பறக்கத் தயாரான போது தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து பயணிகள் மாற்று விமானங்களில் அனுப்பிவைக்கப்பட்டனா்.
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு 65 பயணிகள், 5 விமானப் பணியாளா்கள் என மொத்தம் 70 பேருடன் ஞாயிற்றுக்கிழமை காலை 10.10 மணிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்பட்டது. ஓடுபாதையில் விமானம் ஓடத் தொடங்கி, மேலே பறக்கத் தயாரானபோது, விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தாா்.
இதையடுத்து விமானத்தை உடனடியாக நிறுத்திய விமானி, இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தாா். பின்னா் விமானம் இழுவை வாகனம் மூலம் புறப்பாடு பகுதிக்கு கொண்டு வந்து நிறுத்தி வைக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து விமானப் பொறியாளா்கள் விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்ய அதிக நேரம் ஆனதால், பயணிகள் அனைவரும் மாற்று விமானங்கள் மூலம் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனா்.