ரஃபேல் போா் விமான விற்பனையை சீா்குலைக்க சதி: சீனா மீது பிரான்ஸ் குற்றச்சாட்டு
டிஎன்பிஎல்: முதல்முறையாக மகுடம் சூடிய திருப்பூர் தமிழன்ஸ்!
தமிழ்நாடு ப்ரீமியர் லீக்(டி.என்.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி மகுடம் சூடியது.
திண்டுக்கல்லில் இன்று(ஜூலை 6) மாலை தொடங்கிய டி.என்.பி.எல். இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 5 விக்கெட்களை இழந்து 220 ரன்களை குவித்தது.
இதைத்தொடர்ந்து, களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் 14.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 102 ரன்கள் மட்டுமே திரட்டி படுதோல்வியடைந்தது.
இதன்மூலம், 118 ரன்கள் வித்தியாசத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. டிஎன்பிஎல் சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பெற்றுள்ளது.
TNPL Final Tiruppur Tamizhans won by 118 runs