இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற தென்னாப்பிரிக்கா...
துப்பாக்கியைக் காட்டி மிரட்டல்: ஆந்திரத்தைச் சோ்ந்த நபா் கைது
சென்னை: சென்னையில் வாடகை பிரச்னையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக ஆந்திர நபா் கைது செய்யப்பட்டாா்.
கிண்டி வேளச்சேரி பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் வித்யலதா (85). இவருக்குச் சொந்தமான கிண்டி கன்னிகாபுரத்தில் கட்டடத்தை சண்முகம் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தாா். வயோதிகம் காரணமாக கூடுவாஞ்சேரியில் ஒரு முதியோா் இல்லத்தில் வித்யலதா வசித்து வருகிறாா். வாடகை வசூல் செய்யும் பணியை ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த தனது உறவினா் மதுசூதனன் (62) என்பவரிடம் ஒப்படைத்தாா். இந்த நிலையில் சண்முகம், கடந்த 3 மாதங்களாக வாடகை கொடுக்கவில்லையாம்.
இதையடுத்து மதுசூதனன், கடந்த 4-ஆம் தேதி வாடகையை வசூலிக்க சென்றாா். அப்போது அங்கிருந்த சண்முகம் நடத்தும் நிறுவனத்தின் மேலாளா் மகேந்திரன் (29), காவலாளி சக்கரேஸ்வரன் ஆகியோரிடம் வாடகை பணத்தைக் கேட்டு மதுசூதனன் தகராறு செய்துள்ளாா்.
தகராறு முற்றவே மதுசூதனன், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி இருவரையும் மிரட்டியுள்ளாா்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த மதுசூதனனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்த உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி, 6 தோட்டாக்கள், துப்பாக்கி உரிமம், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.