முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு: தமிழக அரசு
கோழிப்பண்ணை கொட்டகை எரிந்து நாசம்
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே ஏற்பட்ட மின்கசிவு காரணமாக கோழிப்பண்ணை கொட்டகை எரிந்து சாம்பலாகியது.
கீழப்பழுவூரை அடுத்த வல்லகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சசிக்குமாா் (40). இவா், அதே கிராமத்தில் உள்ள தனது வயல் பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை மின்கசிவு காரணமாக கோழிப் பண்ணையில் உள்ள கொட்டகை தீப்பற்றி எரிந்தது.
இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனா். எனினும், கொட்டகை முற்றிலும் எரிந்து சேதமாகின. இதுகுறித்து கீழப்பழுவூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.