``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: பணியாளா்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்
அரியலூா் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்க வரும் முன்களப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக அரசின் சாா்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையில் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி, அரியலூா் மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து அவா்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நகா்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் முன்களப்பணியாளா்கள் மூலம் வீடு வீடாக சென்றுச் கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெறவுள்ளது.
கணக்கெடுப்பிற்காக ஏற்கெனவே தோ்வு செய்யப்பட்ட சமூக சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் முன்களப்பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இந்தக் கணக்கெடுப்பு பணி ஜூலை 10-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடத்தப்படும் இக்கணக்கெடுப்பிற்காக தங்கள் வீடுகளுக்கு வரும் முன்களப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.