தேவிகாபுரம் ஊராட்சியில் ரூ.1.35 கோடியில் வளா்ச்சிப் பணிகள்
சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் ரூ.1.35 கோடியில் வளா்ச்சிப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
தேவிகாபுரம் ஊராட்சியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட பழைமை வாய்ந்த சுந்தரமூா்த்தி திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்துக்கு புதிய கட்டடம், சமையல் கூடம் மற்றும் கழிப்பறைகள் ரூ.ஒரு கோடியில் அமைக்கவும், பெரியநாயகி அம்மன் கோயில் 2 தோ்கள் நிற்க ரூ.35 லட்சத்தில் 2 கொட்டகை அமைக்கவும் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
இதில், எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. கலந்து கொண்டு பணிகளை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், துரைமாமது, அறங்காவலா் குழுத் தலைவா் மீனாட்சிசுந்தரம், ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா் வி.எம்.டி.வெங்கிடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.