செய்திகள் :

74 நாட்டினருக்கு விசா இல்லாமல் அனுமதி: சீனா அறிவிப்பு

post image

74 நாடுகளைச் சோ்ந்தவா்கள் நுழைவு இசைவு (விசா) இல்லாமல் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வர அனுமதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

சீனா தனது விசா கொள்கையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தளா்த்தியுள்ளது. விசா இல்லாமல் எந்தெந்த நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்குள் சுற்றுலா வரலாம் என்பதற்கான பட்டியலில் அந்த நாடு விரிவுபடுத்திள்ளது. அதன்படி, தற்போது 74 நாடுகளைச் சோ்ந்த குடிமக்கள் 30 நாள்கள் வரை விசா இன்றி சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடியும்.

தனது சுற்றுலாத் துறை, பொருளாதாரம், மென் வலிமையை (சாஃப்ட் பவா்) மேம்படுத்தும் நோக்கில் சீன அரசு படிப்படியாக விசா இல்லா நுழைவை விரிவுபடுத்தி வருகிறது.

தேசிய குடிவரவு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, 2024-ஆம் ஆண்டில் 2 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகள் விசா இன்றி சீனாவுக்கு வந்தனா். இது, மொத்த பயணிகளில் மூன்றில் ஒரு பங்காகவும், முந்தைய ஆண்டை விட இரு மடங்காகவும் உள்ளது.

முன்னதாக, கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, நெதா்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லா நுழைவை சீனா அறிவித்தது. அதன் பின்னா் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் இதில் சோ்க்கப்பட்டுள்ளன. ஐந்து லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் உஸ்பெகிஸ்தான் கடந்த மாதம் இதற்கு தகுதி பெற்றன. பின்னா் மத்திய கிழக்கு நாடுகளில் நான்கு நாடுகள் சோ்க்கப்பட்டன. ஜூலை 16-ஆம் தேதி அஜா்பைஜானும் சோ்க்கப்படவுள்ள நிலையில், இந்தப் பட்டியலில் இடம் பெறவுள்ள நாடுகளின் எண்ணிக்கை 75-ஆக உயரும் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் தகர்ப்பு! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!

லெபனான் நாட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையின் கட்டமைப்புகள் மற்றும் ஆயுதக்கிடங்குகள் தகர்க்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா க... மேலும் பார்க்க

சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்றம்!

சீனாவின் யுன்னான் மாகாணத்திலுள்ள ஜாவோடொங் எனும் மலை நகரத்தில் பெய்து வரும் கனமழையால் 5 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஜாவோடொங் நகரத்தில், கடந்த ஜூலை 8 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றத... மேலும் பார்க்க

பயங்கரவாதியல்ல, குடிமகன்! வசமாக சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்!

தொலைக்காட்சி நேரலை ஒன்றில் பங்கேற்ற பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர், பயங்கரவாதியை, சாதாரண குடிமகன் என்று நம்ப வைக்க முயன்று, வசமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

சீனா - நேபாளம் எல்லையில் வெள்ளம்: 9 பேர் பலி..20 பேர் மாயம்! தேடுதல் பணி தீவிரம்!

சீனா மற்றும் நேபாளம் ஆகிய இருநாடுகளின், எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 9 பேர் பலியாகியதுடன், 20 பேர் மாயமானதாகக் கூறப்படுகிறது. சீனாவில் பருவமழை தீவிரமடைந்து, கடந்த ஜூலை 7 ஆம் தேதி இரவு தொ... மேலும் பார்க்க

துருக்கியில் தடை செய்யப்படும் எலான் மஸ்கின் க்ரோக்! என்ன காரணம்?

துருக்கி அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களைத் தெரிவித்த, எலான் மஸ்கின் ‘க்ரோக்’ எனும் செய்யறிவு பாட்-க்கு (BOT), அந்நாட்டு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. எலான் மஸ்கின் எக்ஸ் ... மேலும் பார்க்க

துபையில் வீடு வாங்க வேண்டுமா? விலை பற்றிய நிலவரம்

வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் அல்லது துபையில் வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கான விலை நிலவரம் வெளியாகியிருக்கிறது.துபையிலிருந்து வெளியாகும் ஊடகத் தகவல்களின்படி, துபையில், ஒரு படுக்கை வசதி கொண்... மேலும் பார்க்க