செய்திகள் :

துருக்கியில் தடை செய்யப்படும் எலான் மஸ்கின் க்ரோக்! என்ன காரணம்?

post image

துருக்கி அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களைத் தெரிவித்த, எலான் மஸ்கின் ‘க்ரோக்’ எனும் செய்யறிவு பாட்-க்கு (BOT), அந்நாட்டு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

எலான் மஸ்கின் எக்ஸ் சமூக வலைதளத்தில் செயல்படும், எக்ஸ்ஏஐ நிறுவனத்தின் தயாரிப்பான க்ரோக் எனும் செய்யறிவு சாட்பாட்-யிடம் அந்நாட்டு பயணர்கள், அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், மறைந்த அவரது தாயார் மற்றும் முக்கிய தலைவர்கள் குறித்து சில கேள்விகளைக் கேட்டுள்ளனர்.

அந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த க்ரோக், அவர்கள் குறித்து அவதூறானக் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த செய்யறிவு, அந்நாட்டின் நவீனகால தந்தையாகக் கருதப்படும் முஸ்தஃபா கெமால் அடாடுர்க் என்பவரை பற்றியும் அவதூறு பதில்களை அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சமூக ஒழுக்கத்தை சீர்கெடுக்கும் அச்சுறுத்தல் எனக் கூறி அந்த செய்யறிவு தொழில்நுட்பத்துக்கு துருக்கியின் இணைய சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அங்காரா நகர மக்கள் அந்நாட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இன்று (ஜூலை 9) அந்த மனுவை விசாரித்த அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றம், கோரிக்கையை அங்கீகரித்து, அந்த செய்யறிவு தொழிநுட்பத்துக்கு தடை விதிக்குமாறு துருக்கியின் தொலைத்தொடர்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, க்ரோக் செய்யறிவு தொழில்நுட்பம் சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட பின்னர், அதனிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அரசியல் ரீதியான தவறான பதில்களைத் தருவது மிகப் பெரியளவில் சர்ச்சையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

A Turkish court has banned Elon Musk's bot, 'Grok,' for making defamatory comments about prominent leaders, including the president.

இதையும் படிக்க: துபையில் வீடு வாங்க வேண்டுமா? விலை பற்றிய நிலவரம்

பாகிஸ்தான் - சீனா - வங்கதேசம் கைகோப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல: முப்படை தலைமைத் தளபதி எச்சரிக்கை

பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகள் கூட்டு சோ்வது, இந்தியாவின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு நலன்களில் தீவிர விளைவை ஏற்படுத்தக் கூடும் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான் எச்சரித்துள்ளாா... மேலும் பார்க்க

இந்தியா-நமீபியா இடையே 4 ஒப்பந்தங்கள் - பிரதமா், அதிபா் முன்னிலையில் கையொப்பம்

இந்தியா-நமீபியா இடையே சுகாதாரம், தொழில்முனைவு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த 4 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. நமீபிய தலைநகா் விண்ட்ஹோக்கில் அந்நாட்டு பெண் அதிபா் நெடும்போ நான்டி என்டியெயிட்வாவ... மேலும் பார்க்க

போப் பதினான்காம் லியோவுடன் உக்ரைன் அதிபர் சந்திப்பு!

இத்தாலி தலைநகர் ரோமில், உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஸெலன்ஸ்கி, போப் பதினான்காம் லியோவை சந்தித்து, ரஷியாவுடனான போரின் பாதிப்புகள் குறித்து உரையாடியுள்ளார். ரோமில் வரும் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ... மேலும் பார்க்க

லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் தகர்ப்பு! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!

லெபனான் நாட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையின் கட்டமைப்புகள் மற்றும் ஆயுதக்கிடங்குகள் தகர்க்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா க... மேலும் பார்க்க

சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்றம்!

சீனாவின் யுன்னான் மாகாணத்திலுள்ள ஜாவோடொங் எனும் மலை நகரத்தில் பெய்து வரும் கனமழையால் 5 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஜாவோடொங் நகரத்தில், கடந்த ஜூலை 8 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றத... மேலும் பார்க்க

பயங்கரவாதியல்ல, குடிமகன்! வசமாக சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்!

தொலைக்காட்சி நேரலை ஒன்றில் பங்கேற்ற பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர், பயங்கரவாதியை, சாதாரண குடிமகன் என்று நம்ப வைக்க முயன்று, வசமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய... மேலும் பார்க்க