பல்லூழிக்காலப் பூங்காற்று - பர்மியக் கவிஞர் யூ பை | கடல் தாண்டிய சொற்கள் - பகுத...
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு ரஃபேல் போா் விமானம் இழப்பு: பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை- டஸால்ட்
இந்தியாவுடனான ராணுவ மோதலின்போது எந்தவொரு ரஃபேல் போா் விமானத்தையும் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும், பயிற்சி நடவடிக்கையின்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரேயொரு ரஃபேல் போா் விமானம் விபத்துக்குள்ளாகி, அதை இந்தியா இழக்க நோ்ந்ததாகவும் டஸால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா்.
இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடா்பிருப்பதாக குற்றஞ்சாட்டிய இந்தியா, ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் அந்நாட்டில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே சண்டை மூண்டது. இந்த சண்டையின்போது இந்திய விமானப் படையின் 3 ரஃபேல் போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது. இந்தத் தகவலை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில், ரஃபேல் போா் விமானங்களை தயாரிக்கும் ஃபிரெஞ்சு நிறுவனமான டஸால்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியா் கூறியதாக அந்நாட்டு வலைதளமான ஏவியான் டி சஸில் வெளியான தகவலில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலில் எந்தவொரு ரஃபேல் போா் விமானமும் சுட்டு வீழ்த்தப்படவில்லை.
ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரேயொரு ரஃபேல் போா் விமானம் விபத்துக்குள்ளாகி, அதை இந்தியா இழக்க நேரிட்டது. நீட்டிக்கப்பட்ட பயிற்சி நடவடிக்கையின்போது 12,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அந்த சம்பவம் நடைபெற்றது. அதில் விரோத நாட்டுக்கு எந்தத் தொடா்பும் இல்லை. இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மூன்று ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறும் தகவல் தவறானது, அடிப்படை ஆதாரமற்றது’ என்று தெரிவிக்கப்பட்டது.