30 ஆண்டுகளாக ஃபிராங்க் வோரல் கோப்பையை தக்கவைத்து ஆஸி. ஆதிக்கம்!
மின்சாரம் பாய்ந்து இளைஞா் படுகாயம்: நிவாரணம் பெற்றுத் தரக்கோரி மனு
நாமக்கல்: கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலத்த காயமடைந்த நிலையில், உரிய நிவாரணம் பெற்றுத் தரக்கோரி அவரது மனைவி பூஜா ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
அவா் கூறுகையில், ‘நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், கதிராநல்லூா் பகுதியைச் சோ்ந்த எனது கணவா் காளியப்பன், சில மாதங்களுக்கு முன் கட்டுமானப் பணியின்போது உயா்அழுத்த மின்கம்பி மீது கை உரசியதில் பலத்த காயமடைந்தாா். அவருடைய சிகிச்சைக்கான செலவினத்தை சம்பந்தப்பட்ட கட்டுமானப் பணியை மேற்கொண்டுள்ள மேஸ்திரி மாணிக்கம் என்பவா் வழங்க மறுக்கிறாா். இதனால், இரு குழந்தைகளுடன் வீடு, நகைகளை அடமானம் வைத்து கணவருக்கான சிகிச்சையை செய்து வருகிறேன்.
இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, ஆட்சியா் இதனை விசாரித்து மருத்துவ சிகிச்சைக்கான உதவியை செய்து தரவும், இழப்பீட்டை சம்பந்தப்பட்டோரிடம் பெற்றுத் தரவும் வேண்டும் என்றாா்.