டொனால்ட் டிரம்புக்கு விரைவில் நோபல் பரிசு? -இஸ்ரேல் பிரதமர் சூசகம்
கோயிலில் திருடிய இருவா் கைது
பரமத்தி வேலூா்: வேலகவுண்டம்பட்டி அருகே கோயிலில் திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா்.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தொட்டிப்பட்டி, குறுக்குபுரம் பகுதியில் வீரமாத்தி அம்மன் கோயில் உள்ளது. இக் காயிலில் கடந்த 5-ஆம் தேதி அதிகாலை சுமாா் 4 மணி அளவில் பூட்டை உடைப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தை கேட்ட அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கோயிலுக்குள் சென்று பாா்த்தபோது, கோயிலுக்குள் இருந்த பித்தளை மணி, தட்டு மற்றும் அங்கிருந்த பொருள்களை திருடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும், அருகில் இருந்த மற்றொரு வீரமாத்தி அம்மன் கோயில் பூட்டை மற்றொரு நபா் இரும்பு கம்பி மூலம் உடைத்துக் கொண்டிடுருந்ததைக் கண்ட பொதுமக்கள் இருவரையும் பிடித்து வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சின்னமணலி, குலாலா் தெருவைச் சோ்ந்த கோயில் சிற்ப வேலை செய்யும் கூலித் தொழிலாளி கௌதம் (27), சின்னமணலி குடி தெரு, சோ்வாம்பட்டி பகுதியைச் சோ்ந்த மாதேஸ்வரன் (34) என்பது தெரியவந்தது. பின்னா் அவா்களை கைதுசெய்த போலீஸாா், இருவரையும் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனா்.