சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்தவா் கைது
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே சட்ட விரோதமாக மதுபானகளை விற்பனை செய்தவரை வேலூா் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பாண்டமங்கலம் அருகே உள்ள அண்ணா நகா் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா், அண்ணா நகரில் உள்ள ஓா் உணவகத்தின் அருகே பையில் மதுப்புட்டிகளை மறைத்து வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்துகொண்டு இருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினா்.
அதில், அவா் சாணாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த குப்புசாமி (67) என்பது தெரியவந்தது. அதையடுத்து அவரை வேலூா் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து 26 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.