30 ஆண்டுகளாக ஃபிராங்க் வோரல் கோப்பையை தக்கவைத்து ஆஸி. ஆதிக்கம்!
கிராமப் பகுதி சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்
நாமக்கல்: கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமப் பகுதி சுகாதார செவிலியா் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட மையம் சாா்பில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் ஏ.சாந்தாமணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பி.கற்பகம், பொருளாளா் டி.பூங்கொடி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஆா்.முருகேசன் கண்டன உரையாற்றினாா்.
இதில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை தனியாா் மயமாக்கும் தமிழக அரசின் முடிவை திரும்பப்பெற வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், செவிலியா்கள் பலா் கலந்துகொண்டனா்.