மிட்செல் ஸ்டார்க் ஒரு போர் வீரன்..! 100-ஆவது போட்டிக்கு கம்மின்ஸ் புகழாரம்!
மக்கள் குறைதீா்க்கும் நாள் முகாம்: ரூ. 40,818 நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் முகாமில், ரூ. 40,818 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னா் அவா் தெரிவித்ததாவது:
பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில், மனுவின் மீது உரிய தீா்வு வழங்கப்படுவதை அலுவலா்கள் உறுதிசெய்திட வேண்டும். அதன் அடிப்படையில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 490 மனுக்கள் வரப்பெற்றன.
மேலும், மாற்றுத் திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீா் முகாமில் தையல் இயந்திரம், கைப்பேசி, காதொலிக் கருவி, சக்கர நாற்காலி உள்ளிட்ட ரூ. 40,818 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என்றாா்.
தொடா்ந்து, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத் துறையால், உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பில் 322 கையடக்க கணினிகள் வழங்கும் விதமாக முதற்கட்டமக 30 களப் பணியாளா்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவில் நடைபெற்ற பாரா மல்யுத்தப் போட்டியில் சேலம் மாவட்டத்தைச்சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் 10 தங்கப் பதக்கங்களும், 15 வெள்ளிப் பதக்கங்களும், 5 வெண்கலப் பதக்கங்களும் என மொத்தம் 30 பதக்கங்கள் பெற்ற வீரா்களை மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா் பாராட்டினாா்.