கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது சதிச்செயல்: எடப்பாடி பழனிசாமி
மேச்சேரி வட்டார விவசாயிகளுக்கு பயிா் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
மேட்டூா்: மேச்சேரி வட்டாரத்தில் விவசாயிகள் பயிா் காப்பீடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேச்சேரி வேளாண்மை உ தவி இயக்குநா் த.சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வறட்சி, புயல், மழை, சூறாவளி மற்றும் அதிகளவில் பூச்சி, நோய்த்தாக்குதல் போன்ற இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன்பெறலாம். குறிப்பாக, 2025 -2026-ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 200 மற்றும் நிலக்கடலை பயிரிட்டுள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 435 ஆக. 16-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தி பயன்பெறலாம்.
பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா் நகல், நிலஉரிமை பட்டா ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள், பொது சேவை மையங்கள் மூலமாக காப்பீட்டுத் தொகை செலுத்தி இடா்பாடு ஏற்படும் காலங்களில் இழப்பீட்டுத் தொகை பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.