காளியம்மன் கோயில் திருவிழா
நீடாமங்கலம்: பழையநீடாமங்கலத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் 28-ஆம் ஆண்டு திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
கஞ்சிவாா்த்தலும் சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது. மாலையில் முளைப்பாறி எடுத்தல், காவடி எடுத்தல், இரவு சக்திகரகம் எடுத்தல் நடைபெற்றது.